விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :16, டிசம்பர் 2017(18:18 IST)
மாற்றம் செய்த நாள் :18, டிசம்பர் 2017(12:29 IST)

அருவி 

ஒரு அவசரத்திற்காக ஒரு லட்ச ரூபாய் பண உதவி கேட்ட பெண்ணை தவறாக பயன்படுத்திக்கொண்ட முதலாளி அவர். இன்னொரு தருணத்தில் அதே முதலாளி  அழுதுகொண்டே  சொல்லும் ஊர் பேர் தெரியாத பணியார கிழவி செத்த கதையை கேட்டு அவளே  அழுகிறாள். ஒரு பெண்ணின் தேவையை பயன்படுத்தும்  சபலம்  இருக்கும் அதே மனிதனிடம் ஊர் பேர் தெரியாத கிழவிக்கான கண்ணீரும் இருக்கிறது. இது தான் 'அருவி' பேசும் அன்பு.  ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கு நிகழும் அசாதாரண சூழ்நிலையால், அவள் வாழ்க்கை தடம் மாறி எப்படியெல்லாம் பயணிக்கிறது, அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே அருவி படத்தின் கதை. வெகுஜன சினிமாவிலிருந்து மாறுபட்டும், மாற்று சினிமாவுக்கு உரித்தான மெதுவாக கதை சொல்லும் பாணியில் இருந்து சற்றே வேறுபட்டும்  அனைத்து  உணர்ச்சிகளையும் உள்ளடக்கி, வாழ்வை குறித்த நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும்  கலகலப்பாகவும் உணர்ச்சி பொங்கவும் ஆய்வு செய்திருக்கிறாள், இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனின் 'அருவி'. 

'அருவி'யாக வரும் அதிதி பாலன் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை மாற மாற தோற்றத்திலும்  உணர்ச்சிகளிலும்  பிரமிக்க வைக்கிறார். 'எப்படியாவது பணம் சம்பாரிச்சா போதும், மரியாதை கிடைக்கும்,  எதுக்கு இந்த குப்பை வாழ்க்கை' என்று நம் மீதெல்லாம் காறி உமிழ்கிறார்;   'அப்பா நா தப்பு பண்ணல பா, உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் பா' என்று நம்மையெல்லாம் கரைய வைக்கிறார். தமிழ் திரையுலகிற்கு அதிதி  ஒரு அற்புத வரவு. அருவி பாத்திரத்திலிருந்து உடனிருக்கும் திருநங்கை எமிலி, உதவி இயக்குனர் பீட்டர், நிகழ்ச்சி இயக்குனர்,  'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சி நடத்தும் லக்ஷ்மி கோபால்ஸ்வாமி என அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.  இம்மாதிரியான கதையை விறுவிறுப்பாக எடுப்பது என்ற சவாலை, தொலைக்காட்சி செட்டுக்குள் நடக்கும் கலாட்டாக்களின் நகைச்சுவையால்  மிக நேர்த்தியாக சமாளித்திருக்கிறார் அருண் பிரபு. முதல் பாதியில் அருவியின் வாழ்க்கையை  மான்டேஜ் ஆக தொடுத்து, அவ்வப்போது மட்டும்  வசன காட்சிகளை வைத்த  கதை சொல்லல் முறை நமக்கு மிகப்  புதிது. அதனால் படத்துக்குள் செல்ல சற்று தாமதம் ஆவது உண்மை. அந்த தாமதத்துக்கு பிறகு இறுதி வரை அருவி நம்முள் பாய்கிறாள். 

படத்தின் ஒரு புள்ளியில் சிறியதாக காட்டப்படும் ஒரு  விஷயம் இன்னொரு புள்ளியில் சரியாக இணைக்கப்பட்டு   எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை யுக்தி மிக சிறப்பு. ஷெல்லி காலிஸ்டின் ஒளிப்பதிவு சம்பவங்களை நேரில் பார்க்கும் அனுபவத்தை தருகிறது.  செயற்கை ஒளியை பெரிதாக பயன்படுத்தாமல், சினிமாவுக்கான ஏற்பாடுகள் அதிகம் இல்லாமல் மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார். இயற்கையை காட்டும்பொழுது மட்டும் தன் பிடிவாதத்தை தளர்த்தியிருக்கிறார். படத்தொகுப்பில்  ரேமண்டின் உழைப்பு அசர வைக்கிறது. அருவியின் மழலை பருவத்திலிருந்து நிகழ் காலம் வரை வரும் காட்சிகளை அடுக்கடுக்காக இத்தனை கூர்மையாக அழகாக அடுக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் அருவியுடனான தங்கள் வாழ்வை கூறுவது ஒரு 'ஸ்லாம் புக்'கை திருப்புவது போன்ற உணர்வு, மகிழ்ச்சியும் துக்கமுமாக. ஒரு திரைப்படம் மழை போன்றதென்றால், இசை இடியாகவும் இருக்கலாம், மின்னலாகவும் இருக்கலாம், இல்லை இந்தப் படத்தில் இருப்பது போல, படத்தை தொல்லை செய்யாமல் வலுப்பெறச் செய்யும்  மென் காற்றாகவும் இருக்கலாம். பிந்துமாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜின் இசை படத்திற்கு பெரிய பலம்.   

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எத்தனை குண்டுகளை கொண்டிருக்கும் என்னும் கேள்வியும், அதை பயன்படுத்தி அத்தனை பேரையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதையும், படத்தை உள்வாங்க நேரும் தாமதமும் இறுதியில் மறந்து போகின்றன.  'அருவி'யிலிருந்து  'ரோல்ல்ல்லிங் சார்ர்ர்' சொன்னவர் வரை மறக்க முடியாத பாத்திரங்களை படைத்து, படம் பார்த்த ஒவ்வொருவரையும், படம்  முடியும் பொழுது பேரன்பை உணர வைத்த இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கும், இத்தகைய கதை, திரையில் எப்படி வருமென உணர்ந்து, அதன் வணிக சவால்களை கடந்து அதை தயாரித்த தயாரிப்பாளர் S.R.பிரபுவுக்கும் நம் அன்பான  பூங்கொத்துகள்.              

அருவி - அழகான  அனுபவம் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : Krishnamurthy Date :1/17/2018 10:53:18 AM
படம் ரொம்ப பிரமாதம் சொல்ல வார்த்தைகள் இல்லை நானும் அழுதேன்