விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?

தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :12, ஜனவரி 2018(18:3 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018(11:46 IST)

தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?

கம்பீரமாக காட்டில் கத்திக்கொண்டு, மன்னிக்கவும் சுத்திக்கொண்டு  இருந்த சிங்கம், காக்கிச் சட்டையையெல்லாம் கழட்டிவைத்துவிட்டு ரிலாக்ஸாக நம்முள் ஒருவராக ஒரு படம் செய்திருக்கிறது. பளிச்சென்றிருக்கும்  சினேகமான சூர்யாவோடு 'தானா சேர்ந்த கூட்ட'த்தைக் கூட்டி வந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

1987  காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்  உச்சத்தில் இருந்த பொழுது நடக்கிறது கதை. தகுதியிருந்தும் லஞ்சம், உயரதிகாரிகளின் உயர்வு மனப்பான்மை போன்ற காரணங்களால் தான் விரும்பிய, அதற்கெனவே  உழைத்து தகுதிகளை வளர்த்துக்கொண்ட வேலையான சிபிஐ வேலையில் சேர முடியாத இளைஞர்  சூர்யா. சிபிஐ அதிகாரிகள் பதவியில் இருந்து செய்யும் ரெய்டுகளை, தானே அமைத்துக்கொண்ட டீமோடு செய்து, அங்கிருந்து எடுக்கும் பணத்தை, லஞ்சத்தையும் அதனால் ஏற்படும் வேலைவாய்ப்பின்மையையும் போக்க தன்னளவில் செயல்படுகிறார். உண்மையான சிபிஐக்கு தெரிந்ததா, சூர்யாவுடன் சேர்ந்த கூட்டத்துக்கு என்ன ஆனது என்பதுதான் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தியில் வெற்றிபெற்ற  'ஸ்பெஷல் 26' மூலக் கதையை காமெடி, உணர்வுகள், சிறப்பாக எடுபடும் சூழ்நிலை பன்ச் என்று தனது பாணியில் கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ராபின்-ஹூட் கதைதான், அதற்கு வசதியாக எண்பதுகளின் இறுதி காலகட்டம், நன்கு அறிமுகமான நட்சத்திர கூட்டம், ஒவ்வொருவருக்கும் ஏற்ற பாத்திரங்கள் வசனங்கள் என ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.  வளர விடாமல் தடுக்கும் உயர்தட்டு வில்லனை அசால்ட்டாக பேச்சிலேயே குத்துவது, பரபரவென செயல்படுவது, சொடக்கு மேல சொடக்குப் போட்டு ஆடுவது என எனர்ஜெடிக் சூர்யா. உடன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நடன இயக்குனர் சிவசங்கர், சத்யன் என ஒவ்வொருவருமே நல்ல தேர்வு. கலையரசன், இயலாமையை நன்றாக வெளிப்படுத்தி அழுத்தத்தை தந்திருக்கிறார். ஆனந்தராஜ், ஆர்ஜே.பாலாஜி கொஞ்ச நேரம் வந்து சிரிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். நாயகி கீர்த்தி சுரேஷ், முதல் பாதியில் அழகாக வந்து செல்கிறார், இரண்டாம் பாதியில் அளவாக வந்துவிட்டு சென்றுவிடுகிறார். நடிகர்களில் சர்ப்ரைஸ் கார்த்திக்கும், சுரேஷ் மேனனும். அந்தக் கால அதிகாரிகளாக அப்போதைய பாணி உடைகளில் தோரணையாக இருக்கிறார்கள். ஆனால், சுரேஷ் மேனன் பேசத்தொடங்கியதும், அவர் மறைந்து கௌதம் மேனன் தான் தெரிகிறார். பிரபலமான ஒருவரின் குரலைப் பயன்படுத்தியிருப்பதன் பின்விளைவு இது. கொஞ்சம் யோசித்திருக்கலாம். கீர்த்தி சுரேஷ் பாத்திரம், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட அந்த குழு என சில விஷயங்கள் பாதியிலேயே விடப்பட்டிருக்கிறது. சூர்யா அண்ட் கோ., வை நிஜ சிபிஐ கார்த்திக்கும் சுரேஷ் மேனனும் பிடித்துவிடுவார்களோ என்ற பதற்றம் பார்வையாளர்களுக்கு கடத்தப்படாமல் மிஸ்ஸிங். அது மிகப்பெரிய குறையே...

'எங்க புள்ள ஒன்னை கொன்னுட்டாங்க' என்று அனிதாவை நினைவுபடுத்துவதும், 'நம்ம அடையாளத்தை மறைக்க நினைச்சா விட்டுட முடியுமா?' என்று கேட்பதும், 'எனக்கு ஊழலே சுத்தமா பிடிக்காது' என்று சொல்லும் பெண், உடனேயே 'என் பெயர் சசிகலா' என்று சொல்வதுமாக படம் முழுவதுமே தைரியமாகவும் கிடைத்த சிறு சிறு இடங்களிலும் கூட ஒரு ரசிக்கத்தக்க விஷயங்களையும் நகைச்சுவையையும் சேர்த்து  வைத்து விளையாடியிருக்கிறார் விக்னேஷ். அனிருத்தின் இசை முழு ஆற்றலோடு ஆட வைக்கிறது. சுரேஷ் மேனனுக்கு வரும் பின்னணி இசை ஒரு உதாரணம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு வண்ணமயம், ஆனால் சில இடங்களில் அதீத வெளிச்சம். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு அளவாக, சரசரவென செல்லும்படியாக்கியிருக்கிறது.  

தானா சேர்ந்த கூட்டம் லாஜிக்கெல்லாம் பார்க்காமல்  ஜாலியாக ஜெயித்திருக்கிறது!     

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :