விமர்சனம்

சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, ஜனவரி 2018(16:27 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018(16:31 IST)

சீயான் போட்ட ஸ்கெட்ச்!

"ஸ்கெட்ச் ஸ்கெட்ச் பண்ணா  ஸ்கெட்ச் மிஸ்ஸாகாது, மிஸ்ஸானா மட்டும் சொல்லு" என்ற 'பன்ச்'சுடன் விக்ரமை வைத்து 'வாலு' இயக்குனர் விஜய் சந்தர் போட்டிருக்கும்  'ஸ்கெட்ச்' மிஸ் ஆகாமல் வேலை செய்திருக்கிறதா? உடனே நினைவுக்கு வருவதில்  அமர்க்களம், ஜெமினி, பீமா போன்ற பல படங்களில் பார்த்த, அடியாள் ஹீரோ கதை தான். சிறிய வித்தியாசம், இவர் ஸ்கெட்ச் போட்டு தூக்குவது  ஆளை அல்ல, தவணை கட்டாத வண்டிகளை.   அதிலும் பிரச்சனைக்குரிய வண்டிகளைத் தூக்குவதில் தேர்ந்தவர். வடசென்னை ஃபைனான்ஸ் சேட்டிடம் வேலை பார்க்கும் 'ஸ்கெட்ச்' ஜீவா (விக்ரம்)  ஒரு பெரிய தாதாவின் வண்டியைத் திட்டமிட்டுத் தூக்க, அவருக்குப் பகையாகிறார். தொடர்ந்து விக்ரமையும், உடனிருந்தவர்களையும் அந்த தாதா என்ன செய்கிறார், எவரையும் எதிர்கொள்ளக் கூடிய ஸ்கெட்ச் அந்த தாதாவை எதிர்கொண்டாரா  என்பதே கதை. 

நீண்ட நாட்களாக விக்ரமை ஒரு பவர்ஃபுல்லான பாத்திரத்தில் பார்க்கக் காத்திருக்கும் நமக்கு, தோற்றமும் தமன் பின்னணி இசையும் கூடிய படத்தின் தொடக்கக் காட்சிகள், மகிழ்ச்சியாக்குகின்றன. எந்தப் பாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய ஒருவரை பயன்படுத்துவது இயக்குனர் கைகளில் தான். 'கெத்தான'  பின்னணி இசையென்றாலும்  தொடர்ந்து வரும் அடுத்தடுத்த 'ஓப்பனிங்' காட்சிகள் சற்று அலுப்பாக்குகின்றன. விக்ரமின் தோற்றத்திலும் தோரணையிலும் வயது தெரிகிறது. அதற்கு பொருந்தாத காதல் ஏக்கக் காட்சிகள் நம்மை சங்கடப்படுத்துகின்றன. காலம் முழுவதும்  காதல் செய்யும் ஹீரோக்களின் பட்டியலில் விக்ரம் சேர்ந்துவிடக்கூடாது. தமன்னா, ரௌடி நாயகனின் டெம்ப்லேட் நாயகியாக வருகிறார். விக்ரமுக்கு அவர் மேல் காதல் வந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு தமன்னாவின் தோழியாக வரும் பிரியங்கா  மீது காதல் வருகிறது. அவர் அழகாகத் தெரிகிறார். விக்ரமின் நண்பர்களாக வரும் ஸ்ரீமன் அண்ட் கோ.,வில் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, அவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வரும் அபிஷேக், முறைப்பாக, விறைப்பாக கவனிக்க வைக்கிறார். தமிழ் சினிமாவில் இப்பொழுது விக்ரம் வேதா 'சேட்டா' ஹரீஷ் பரோடியின் பக்கம் காற்றடிக்கிறது. ஆனால், தொடர்ந்து அதே போன்ற பாத்திரங்கள். அருள்தாஸ், தேனப்பன், ஆர்.கே.சுரேஷ் , பாபுராஜ் என்று பலரும் வடசென்னை புள்ளிகளாக வந்து போகிறார்கள். சூரி திடீரென்று சில காட்சிகளில்  வந்து போகிறார், கடைசி நேரத்தில்  சேர்த்தது போன்ற உணர்வு.

விக்ரம்-ஸ்ரீமன்-'மாமி' தமன்னா என 'சேது' ஞாபாகங்களை பயன்படுத்தியது, அதிரடியான சண்டைக் காட்சிகள், வில்லன் தந்தை சுவாரசியம் என கமர்ஷியல் காட்சிகள் நன்றாக யோசித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், எக்கச்சக்க படங்களில் பார்த்த, எளிதில் கணிக்கக்கூடிய கதையும், காட்சிகளுமாக முதல் பாதி நம்மை சோதிக்கிறது. ஓப்பனிங் பாடல், முடிந்ததும் நாயகி அறிமுகம், பார்த்ததும் காதல், என இந்த டெம்ப்லேட் காலாவதியாகிவிட்டதை இயக்குனர்  விஜய்சந்தர் கவனிக்க வேண்டும்.  இடைவேளை ஸ்கெட்ச், வில்லனை கொல்லும் காட்சி, கிளைமாக்சில் சிறப்பான ட்விஸ்ட் ஆகிய மூன்று விஷயங்களை சிறப்பாக   அமைத்ததைப் போல, திரைக்கதையை இன்னும் கொஞ்சம் கவனித்திருந்தால் ஸ்கெட்ச் வொர்க்-அவுட் ஆகியிருக்கும்.

பாடல்களில் மனதில் தங்காத  தமனின் இசை, பின்னணி இசையில் நின்று விளையாடி மாஸ் காட்டியிருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் அந்த மூன்று காட்சிகளின் பரபரப்பில் சிறப்பாகத் தெரிகிறது. தமிழ் படங்களில்  சமீப காலமாக 'ஏரியல் ஷாட்'கள் அதிகமாகிக் கொண்டிருக்கினறன, படத்துக்கு தேவைப்பட்டிருப்பதால் நன்றாக இருக்கிறது. இறுதியில் போடப்படும் 'மெசேஜ்' சற்று பொருந்தாமல் துருத்துகிறது. 

மூன்று நல்ல இடங்களுக்காக இரண்டரை மணிநேரம் செலவிடத் தயாரென்றால் 'ஸ்கெட்ச்' பார்க்கலாம்.      

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :