ஸ்பெஷல்

வலியவன் - வென்றானா? தோற்றானா? (விமர்சனம்)
......................................
CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) - விமர்சனம்!
......................................
கமலிடம் மன்னிப்பு கேட்ட ஆமிர் கான்! நடந்தது என்ன?
......................................
படத்தின் ரிலீஸ் என் கையில் இல்லை - கமல்!
......................................
தேசிய விருதுகள் 2014!
......................................
கள்ளப்படம் - விமர்சனம்!
......................................
இளம் நடிகர்களுக்கு சிவாஜி சொல்லும் கருத்து !
......................................
ராஜதந்திரம் - விமர்சனம்!
......................................
மகாபலிபுரம் - விமர்சனம்!
......................................
மணிரத்னம் ஆடி ஜெயிக்கிற களம் - வைரமுத்து!
......................................
எனக்குள் ஒருவன் - ஒரு பார்வை!
......................................
’கொம்பன்’ கார்த்தியின் பயம் - தயக்கம் - துணிவு!
......................................
காக்கி சட்டை - விமர்சனம்!
......................................
விஜய்யின் ஆதங்கம்! சந்தோஷம்!
......................................
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் - விமர்சனம்!
......................................
இசை - விமர்சனம்!
......................................
டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்!
......................................
யார் ஷமிதாப்? என்ன செய்திருக்கிறார்கள்?
......................................
தொட்டால் தொடரும் - விமர்சனம்!
......................................
மருதநாயகம் - வாமமார்க்கம் ஒன்றா? கமல் விளக்கம்!
......................................
ஐ - பிரம்மாண்டம் இல்ல, அதுக்கும் மேல!
......................................
சமந்தா - கவர்ச்சிப் ’பின்னணி’ - கவர்ச்சிப் போட்டி!
......................................
அஜித்தின் முடிவு! ரசிகர்கள் அதிருப்தி!
......................................
விக்ரம் ஒரு பைத்தியம் - ஷங்கர் ஆவேசம்!
......................................
எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால் ஆவேசம்!
......................................
ஹன்ஸிகாவின் கிளாமரும் இரண்டு கோடியும்!
......................................
பிசாசு - பேரன்பு!
......................................
பொங்கலுக்கு சூர்யா ‘மாஸ்’ ஸ்பெஷலும் உண்டு!
......................................
கே.பாலச்சந்தர் கமலிடம் என்ன பேசினார்?
......................................
ரசிகனே வேண்டாம்! விஜய் தடாலடி!
......................................
இசை விழா அல்ல! பட்டய கிளப்பிய திருவிழா!
......................................
இளம் காதலர்களுக்கு ‘ஆங்கிரி பேர்ட் பெண்ணே’!
......................................
லிங்கா - ஒரு பார்வை!
......................................
’நம் நட்புக்கு வாழ்த்து’ - ரஜினிக்கு கமல் வாழ்த்து
......................................
ஜெயப்பிரதாவுக்கு ரஜினி செய்த உதவி!
......................................
லிங்கா பட ரிலீஸ் பிரச்சனை! கோர்ட் தீர்ப்பு!
......................................
லிங்கா ரிலீஸ் தியேட்டர்கள் விவரம்!
......................................
தமிழகத்தை தாக்கியுள்ள ‘லிங்கா ஃபீவர்’!
......................................
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாகிறது!
......................................
ஏன் இந்த கிண்டல்? லிங்குசாமி வேதனை!
......................................
ர - பேய் இருக்கா? இல்லையா?
......................................
அஞ்சலியின் சூழ்ச்சி! ஆத்திரத்தில் அனுஷ்கா
......................................
நானும் ரௌடி தான் - பரபரப்பில் படப்பிடிப்பு!
......................................
மோடியின் பம்மாத்து வேலை! அரசியல் பேசிய அமீர்!
......................................
’எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது’ - சிம்பு!
......................................
காவியத்தலைவன் - விமர்சனம்!
......................................
அசால்ட் பேரரசு! உஷார் பார்த்திபன்!
......................................
மகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா!
......................................
கஷ்டப்பட்டேன்னு புலம்பாதிங்க - விஜய் சேதுபதி
......................................
வன்மம் - விமர்சனம்!
......................................


தூக்கி ஓரங்கட்டிய கதைக்கு தேசிய விருது- பாண்டிராஜ் பெருமிதம்
          3 தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு, தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது ‘பசங்க’ படம். தேசிய விருது கிடைத்ததில் பசங்க படக்குழுவினர் மட்டுமில்லாமல் தமிழ்த் திரையுலமே எல்லையில்லா சந்தோஷத்தில் இருக்கிறது. 

இந்தத் தருணத்தில், இயக்குனர் பாண்டிராஜும், தயாரிப்பாளர் சசிக்குமாரும் தங்களது ஆனத்த உணர்வினை பேட்டியாக அளித்தனர்.

முதலாவதாக பேசிய இயக்குனர் பாண்டிராஜ், “பசங்க படத்தின் கதையினை முதலில் யாருமே படமாக எடுக்க முன்வரவில்லை. அதனால், ஒரு பெரிய இயக்குனராக சாதித்து அதன் பிறகு இதை எடுக்கலாம் என்று இந்தக் கதையை தூக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டேன். 

அப்போதுதான் நண்பர்களின் மூலமாக சசிக்குமார் சாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். உடனே படத்தை தயாரிக்க சம்மதித்தார். 

‘இந்தப் படம் வெற்றிப் பெறாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும். அதற்காகவே இதை எடுக்கலாம்’ என்றார். அவர் தந்த ஊக்கத்துக்கு பின்புதான் இந்தப் படத்தை எடுத்தோம்.அவர் தான் இந்த விருதுகளுக்கெல்லாம் மூலகாரணம். அவருக்கு எனது முதல் நன்றி. 

படம் வெளிவந்தப்பின் இந்தப் படம் அருமையான படம் என்று அனைவரும் பாராட்டினார்கள். அனைத்து பத்திரிகைகளும் இந்த படத்தின் சிறப்பினை மக்களிடம் கொண்டு சென்றன. பத்திரிகை மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் படமும் பெரிய வெற்றி பெற்றது. இப்போது பசங்கப் படத்திற்கு 3 தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன.
  
எனது முதல் படத்திலேயே, சிறப்பாக வசனம் எழுதியதற்காக எனக்கு விருது கிடைத்தது, உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.பசங்க' படத்துக்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். பசங்களுக்கான வசனம் எழுதும் போது நானே பசங்களாக மாறிவிட்டேன். பசங்களின் மனசு ஒரு விஷயத்தை எப்படி பார்க்குமோ அதே மனநிலையில் இருந்து அந்த விஷயங்களை பார்த்தேன். 

ஜெயப்பிரகாஷ் குளத்தங்கரையில் உட்கார்ந்து வசனம் பேசுவது படத்தில் மிகவும் சிறப்பானதாகும். இந்தக் காட்சிக்கு வசனம் எழுத எனக்கு அதிக நேரமானது. யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கு. 

அன்புக்கரசுக்கும், ஜீவாவுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசியவிருது கிடைத்துள்ளது. இதில் அவர்களை விட எனக்குதான் அதிக சந்தோஷம்.‘பசங்க’ படத்தில் இவர்கள் இருவரும்தான் ஹீரோக்கள். இந்தப் படத்தில் இருவரும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் கிடைத்ததுதான் இந்த விருது.

இவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து குழந்தைகளுமே சிறப்பாக நடித்திருந்தார்கள். அனைவருக்குமே இந்த விருதில் பங்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பெருமையோடு கூறினார் ‘பசங்க’ பாண்டிராஜ்.

இது பற்றி சசிக்குமார், “ பசங்க படத்துக்கு சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  பசங்க படம் திரைக்கு வந்தபோதே நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அந்த வாழ்த்துகள் இப்போது பலித்துள்ளன.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் ‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜ், அதில் நடித்த மற்ற நடிகர் நடிகைகள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள், குறிப்பாக ரசிகர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களால்தான் மூன்று விருதுகள் கிடைத்திருப்பதாக கருதுகிறேன்” என்றார் சிறந்த தயாரிப்பாளர் சசிக்குமார்.

‘பசங்க’படத்தில், கைத் தட்டி பாராட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் பாண்டிராஜ். தேசிய விருது பெற்ற அனைவரையும் கைத்தட்டி பாராட்டுவோம். கைரேகை தேயும் மட்டும்...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : Dr.P.K.SUNDARAM Date :9/16/2010 7:11:29 PM
முயற்சி திரு வினையாக்கும் , மேலும் பரிசுகள் பெற என்னது வாழ்த்துகள் .
Name : jega nagamuthu Date :9/16/2010 5:16:45 PM
congrats from Toronto thx