விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
மாவீரன் கிட்டு - விமர்சனம்
 ................................................................
கொடி - விமர்சனம்
 ................................................................
றெக்க - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :18, ஏப்ரல் 2011(12:18 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஏப்ரல் 2011(12:18 IST)பொன்னர் சங்கர் - பிரம்மாண்டமாய்

                 படம் பார்க்க செல்பவர்களுக்கு திரையில் ஆச்சரியம் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம்! பல கோடிகளை தண்ணி மாதிரி இரைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. கலைஞரின் எழுத்தில் உருவாகியிருக்கும் இந்த அண்ணன்மார்கள், ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையே பிரம்மிக்க வைக்கிறார்கள் என்பது நிஜம் !விஷ்வல் எஃபெக்ட்ஸ் + கிராஃபிக்ஸ் பொன்னர் சங்கரை இன்னும் கூடுதல் பிரம்மாண்டம் சேர்த்திருக்கிறது. கதையின் காட்சியும் அதற்கேற்ற காட்சியமைப்பும் அதோடு கலந்து ஒலிக்கும் இசையும் என பொன்னர் சங்கர் சபாஷ் வாங்குகிறார்கள்.

நெல்லையன் கொண்டான் (ஜெயராம்) மீது காதல் கொள்ளும் தாமரை (குஷ்பு) அப்பாவால் நாட்டை விட்டே துரத்தப்படுகிறாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர். (பிரஷாந்த்+பிரஷாந்த்) ஆனால் தன் மகன்கள் உயிரோடு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ராக்கி அண்ணனால் (ராஜ்கிரண்) ரகசியமாக வளர்க்கப்படும் இவர்கள், தங்களை அழிக்க நினைத்த மந்தியப்பன் (பிரகாஷ்ராஜ்) காளி மன்னன் (நெப்போலியன்) ஆகிய இருவரையும் கொன்றொழிப்பதும், மாமன் மகள்களை கை பிடிப்பதும்தான் கதை.

தமிழ் சினிமா எத்தனையோ ஹீரோக்களின் அறிமுகக் காட்சியை பார்த்திருக்கிறது... ஆனால் அவை அனைத்திலும் தனித்துவம் வாய்ந்தது பொன்னர் சங்கரில் பிரஷாந்த் + பிரஷாந்த் அறிமுகமாகும் காட்சி. அடுத்த காட்சி அணையை உடைத்து ஊர் மக்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் சண்டைக் காட்சி. பலே! சண்டையில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும் டபுள் ஆக்‌ஷனில் ஒரே பிரேமில் எதிரிகளை பிரஷாந்த்’ஸ் தொம்சம் செய்வது டெக்னிகலாக வியப்பு. 

பிறகு காதலிகளை காப்பாற்றும் படலம். ஒரு ஹீரோயின் மலைப் பாம்பிடம் சிக்கிக் கொள்ள இன்னொரு ஹீரோயின் முதலையிடம் சிக்கிக் கொள்கிறார். ஒரு பிரஷாந்த் பாம்பிடமும் இன்னொருவர் முதலையிடமும் போராடி ஜெய்க்கிறார்கள். ( அது உண்மையான பாம்பும் முதலையும் என்று பிரஷாந்த் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னதும் எல்லோருக்குமே கண்கள் கொஞ்சம் விரிந்தது )

பிறகு காதல் பயணங்கள், போர்க்கள காட்சிகள் என கதை நகர்கிறது. போர்க்களத்தில் விஜயகுமாரை பிரஷாந்த் சிரிக்க வைப்பது எதிர்பார்க்காத ஒன்று. ராஜ்கிரண் மார்பில் அம்புகளை தாங்கியபடி நடந்து வருவது உச்சகட்ட நடிப்பு. நெப்போலியன் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது உருக்கம்.

ஸ்னேகா நான்கு காட்சிகளுக்கு வந்தாலும் அளவான அம்சமான நடிப்பு, ஆனால் முகத்தில் முதிர்ச்சி. முதல் பாடலுக்கு மட்டும் பாணு வருகிறார். கடைசி க்ளைமாக்சில் பிரபு வருகிறார். ஒரே காட்சியில் சீதா! இப்படி சிரிய காட்சிகளுக்கு கூட பெரிய ஆர்டிஸ்டை நடிக்க வைக்கும் பெரிய மனசு தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு! 

இசை இளையராஜா - கேட்கவா வேண்டும்! இசைக்கு பஞ்சமில்லை.  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இதையும் பிரஷாந்த்தே கவனித்திருப்பதுதான் வியப்பு. நவீன இயக்குனரான ஷங்கருக்கே சவால் விட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்கு பாராட்டுகள் நிச்சயம்.

கொங்கு நாட்டின் கொஞ்சும் தமிழில் பிரஷாந்த் வசனங்களை அள்ளித் தெரிப்பார் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே. ஆனால் போர்க்களத்தில் பிரஷாந்தின் வாளும் வேலும் நன்றாகவே பேசுகிறது! ம்...

பொன்னர் ஷங்கர் இத்தனை வருட தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படம் என்ற முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்த புகழ் தயாரிப்பாளர் இயக்குனர் தியாகராஜனுக்கே சேரும். 

பொன்னர் சங்கர் - பிரம்மாண்டமாய்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [11]

Name : satheesh kannan Date :1/11/2015 11:22:14 AM
பிரஷாந்த் அருமையான நடிகர் ....
Name : Mohanraj Date :9/2/2011 4:17:48 AM
Good attempt with extraordinary visuals. But story wise there were no boast. We know about one man show. This was two men show, because of Prashanth brothers. Girls don't have much chance to act as usual. Fight scenes are very good. But again there were no common sense. Heroes never get tired and even if they harmed there won't be any scratches in their body. We want Prashanth to act in like the Movies "Kalavaani, Doo, Deivathirumagal, Mainaa, Angaadi theru, Avan ivan, Vaanam. Thank you.
Name : ihsan Date :4/26/2011 2:07:49 PM
கலைஞரை பற்றி புரிந்து கொள்ள இது போதும் . இன்னும் வாழும் கலை இந்த இமயம்.
Name : nallavan Date :4/25/2011 11:03:09 AM
பிலிம் சுபெர்வ் பிரஷாந்த் கு ஒ போடு நல்ல படம் கொடுத்த தியாகராஜன் கு நன்றி மேலும் நல்ல படங்கள் வரணும்.
Name : GAJA PRIYA Date :4/22/2011 10:23:22 AM
கலைஞரின் பேனாவுக்கு இன்னமும் வயதாகவில்லை ...பாராட்டுக்கள்..படத்தின் பிரமாண்டம் வியப்புக்குருயது
Name : Bala Date :4/21/2011 6:40:27 PM
பிரசாந்த்கு கொஞ்சம் வசனம் கொடுத்திருக்கலாம். மற்றபடி அனைத்தும் சிறப்பு .
Name : alexthennavan Date :4/21/2011 6:14:54 PM
இதுபோன்ற படங்கள் அவ்வப்போது வரவேண்டும்...தமிழ்த்திரை உலகை நிமிர்ந்து நிற்க செய்யவேண்டும்
Name : rajendran Date :4/20/2011 10:28:42 AM
கொங்கு மக்களின் சார்பில் இந்த படத்தை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.
Name : MMAHENDRAN Date :4/20/2011 5:25:24 AM
இப்படியான நல்ல படங்களை தயாரித்து மக்களுக்கு காட்டவேண்டும் இயக்குனர் தியாகராஜனுக்கு என்னுடைய நன்றிகள்
Name : maria alphonse Date :4/19/2011 11:48:28 AM
கலைஞரை பற்றி குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது
Name : sharif majeed Date :4/18/2011 4:18:30 PM
sema vimarsanam